×

குடிநீரில் மலம் கலந்த விவகாரம்!: வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை..!!

புதுக்கோட்டை: குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. டெல்லியில் இருந்து வந்த தேசிய பட்டியலின ஆணைய இயக்குனர் ரவிவர்மன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார். ஓராண்டாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பட்டியலின ஆணைய இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய ஆணைய இயக்குனர் ரவிவர்மன், 408 நாட்கள் கடந்த நிலையிலும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை என குற்றம்சாட்டினார். விசாரணை முறையாக நடைபெறவில்லை என மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். விசாரணை குறித்த அறிக்கை 3 நாட்களில் ஆணையத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும். மனிதக் கழிவுகள் கலந்த நீரை சிபிசிஐடி சாம்பிள் எடுத்த விதம் தவறு. இதேபோல் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் தவறு. உண்மை கண்டறியும் சோதனை மட்டுமே இதற்கு தீர்வாகும். அதிக அளவு நீரில், கழிவு கலந்ததால் சோதனை முடிவு சரியாக இருக்காது. விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

The post குடிநீரில் மலம் கலந்த விவகாரம்!: வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தேசிய பட்டியலின ஆணையம் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : National Enlistment Commission ,Mangaiveld ,Pudukkottai ,Pudukkottai District Vengaiwail ,RAVIVARMAN ,NATIONAL LISTING COMMISSION ,DELHI ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை...